adsinr

மீண்டும் கல்லூரியில் ஓர் நாள் பயணம்!!!

 மீண்டும் கல்லூரியில் ஓர் நாள் பயணம்!!! 


கல்லூரி வாழ்க்கை முடிந்து
ஆனது இரண்டு வருடம்....

மீண்டும் கல்லூரிக்கு ஒருநாள்
சென்று வந்தேன்...

கல்லூரியில் பல மாறுதல்கள்
முதல் மாறுதல்
மாணவனாய் சென்ற நான்
அன்று பழைய மாணவனாய்
அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்....

கல்லூரியின் படிக்கட்டுகளில்
முன்னோக்கி ஏறினேன்
என் கல்லூரி நாட்கள்
பின்னோக்கி அழைத்தது....

அதே படிக்கட்டில் ஜூனியர்
மாணவன் ஒருவனோடு
கட்டிபுரண்டு சண்டையிட்டது
படிக்கட்டின் படிகளில் அமர்ந்து
அரட்டை அடித்து
மாணவிகளை வம்பிகிளுத்ததாய்
பல ஞாபகங்கள் என்னுள்....

தனிமை உணர்ந்ததில்லை நான்
அன்று உணர்ந்தேன்
என் நண்பர்கள் இல்லாத
கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது....

என் கண்கள் தேடிசென்று
நின்றது எங்களது வகுப்பறையில்
என்னை வரவேற்று கண்ணீர்
சிந்துவது போல் உணர்தேன்
என் இருப்பிடத்தை பார்த்தபோது....

மௌன மொழி பேசி
எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது
நீ மட்டும்தான் வந்தாயா என்று....

இதயம் கனத்தது
என்னை அறியாமல் ஓர்
வலி என்னில் தோன்ற
என் சந்தோசத்தை மட்டுமே பார்த்த
என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது....

என் இருக்கையில்
கிறுக்கி வைத்த என்
நண்பர்களின் பெயர்களை
தொட்டு பார்த்து கலங்கியது கண்கள்....

கண்ணீரை தொடைத்து கொண்டு
மெல்ல நடந்தேன் கேண்டீனை நோக்கி
ஒரு டி வங்கி ஒன்பது பேர் குடிக்கும்போது
உள்ள சுகம் தனியாளாய் அன்று குடிக்கும்போது
கிடைக்கவில்லை....

கேண்டீன்
மரத்தடி
கல்லூரி பேருந்து
என நாங்கள் களித்த இடங்களில்
நான் மட்டும் நின்று
சற்று நேரம் கல்லூரி நாட்களில்
மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்....

காதல் வந்த தருணம்
காதல் சொல்லிய தருணம்
காதலில் வாழ்ந்த தருணம் என
என் நினைவுகள் நிழலாய் வந்தது....

அலைபேசியை எடுத்து
என் நண்பர்கள் அனைவருக்கும்
தகவல் அனுப்பினேன் நான்
கல்லூரியில் இருக்கேன் என்று
அனைவரும் reply செய்து
நாங்கள் வாழ்ந்த நாட்களை
நினைவுபடுத்தி கொண்டனர் என்னோடு....

நான் கிளம்பும் நேரம்
கல்லூரியை ஏற இறங்க பார்த்துவிட்டு
பெருமூச்சு விட்டு திரும்பி நடந்தேன்....

என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது
என் நினைவுகள் அனைத்துமே
சுற்று சுவர் இல்லாத
எங்கள் கல்லூரியை சுற்றி திரிந்தபடி....

மீண்டும் கிடைக்காத நிமிடங்கள்
மீண்டும் கிடைக்காத என ஏங்கும் நிமிடங்கள்
கல்லூரி வாழ்கையில் மட்டுமே....

தோழர்களே நேரம் கிடைத்தால்
நீங்களும் சென்று வாருங்கள்
உங்கள் கல்லூரிக்கு
நீங்கள் சந்தோசமாக இருந்த
நாட்களை நினைவு படுத்தி வாருங்கள்

கல்லூரி வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அமையும் ஒரு இனிய பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தில் பல புதையல்கள் புதைந்துள்ளது. புத்தியுள்ளவன் புரிந்து புதையல்களை அடைந்து வாழ்வில் வெற்றியை நோக்கி பயணம் செய்கிறான். புரியாதவன் கல்ல்லூரி காலங்களில் கற்பனை மட்டுமே  கனவுகளாய் கொண்டு வாழ்வின் அடிமட்ட நிலைக்கு செல்லும் பல வழிமுறைகளை தேடிக்கொல்கிறான்.  

இந்த நிலைஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்.  என்பது மறுக்க முடியாத உண்மை. நன்மையின் பிறப்பிடம் மட்டுமே கல்லூரி இல்லை. தீய வழிகளின் பிறப்பிடமும் தான். மாணவர்களுக்கு கல்லூரி நன்மைகளை மட்டுமே வழங்குகிறது ஆனால் சிலர் தீமைகளை மட்டுமே எடுத்துகொல்கின்றனர்.

நன்மைகளை கல்லூரி ஆசிரியர் மூலமாகவும் நல்ல நண்பர்கள் மூலமாகவும் நமக்கு வழங்குகிறது.
 அந்த வழிமுறைகளை சிறப்பாக பயன்படுத்துவோர் வாழ்க்கை சிறப்பாகவும், மென்மையாகவும் செல்கிறது.

ஆனால் தீய வழிகளை நாமாகவே தேடிக்கொல்கிறோம். 

இவ்வாறு தேடிக்கொள்ளும் தீய செயல்கள் :

தீய செயல்களில் இருபாலரும் ஈடுபடுகின்றனர்.அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா???
வாங்க எனக்கு தெரிஞ்ஜத சொல்றேன்.
ஆண்கள் செய்யும் தவறுகள்:
  • முதலில்  கல்லூரி சென்றதுமே நல்ல பிகர்களை தேடுதல். தேடுதல் தவறில்லை ஆனால் நாம் சென்றது படிப்பதற்காக. ஆனால் நாம் தேடுவதோ???
  • நண்பர்களுடன் கூட்டணி . கூட்டணி தவறில்லை , ஆனால் கூட்டு சேர்வது நன்மைக்கல்ல தீமைக்கு மட்டுமே. கல்லூரி பாடவேளைகளை கட் அடிச்சிட்டு கண்ட இடத்துல சுத்தறது.  நண்பர்களோட போறது தவறில்லை ஆனால் தான் செய்யும் தவறுகளை அவர்களையும் செய்ய சொல்வதே தவறு. 
அதாவது , மச்சி வாடா படிக்கலாம்னு சொன்ன தப்பு இல்ல. வாட தம் அடிக்கலாம்னு கூப்டதா தப்பு.  

தப்பு பண்ணிட்டமே என்று வருத்தப்படுறவன் தன தப்ப திருத்திக்க வாய்ப்பு இருக்கு. ஆனா தப்பு பண்ணிட்டோம் என்ன பன்னமுடியும்னு நார்த்திகம் பெசறவன் திருத்துவானங்கறது சந்தேகமானது. 
  ஒவ்வொருவருமே தம்மைத்தாமே முதலில் உணர வேண்டும்..
மன்னிக்கவும் நண்பர்களே சிறு வேலை காரண மாக கருத்துகளை தற்சமயம் நிறுத்துகிறேன். விரைவில் கருத்துகள் தொடரும். உங்கள் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் கல்லூரி வாழ்க்கை பற்றி எழுதி boopathi.sugan@gmail.com  இந்த இணைப்பிற்கு அனுப்புங்கள்.

 எமது கருத்துகளை படித்தமைக்கு நன்றி.... மீண்டு விரைவில் வருகிறேன்... இவன் பூ............