adsinr

Tuesday 20 December 2011

என் அம்மா

 என் அம்மா

"நான் க‌ண் திறந்து பார்த்த முதல் பெண் என் அம்மா
          

நான் கண் திறக்கக் காரணமும் அவளே !"

 

"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம், பெற்ற தாயின்றி வேறொன்று ஏது"
 
உண்மை, எனது பார்வையில் ‍ அம்மாவை வணங்காது உயர்வில்லை.
                                                 
 
நான் பிறக்கும்போது என்னோடு மறுபிறவி எடுத்தாள்

அவள் செந்நீரை சொட்டச் சுவைத்தேன் ‍- அன்றும் உணரவில்லை ‍

நிலாச்சோறுடன் அவள் விரல்‍சோற்றையும் சுவைத்தேன் - அன்றும் உணரவில்லை

மழலைநடை பழக்கிய அவள் பாதம் நோகச்செய்தேன் - அன்றும் உணரவில்லை

நித்திரையில் நிழலாக நின்றாள் - அன்றும் உணரவில்லை

கல்லூரி கலாட்டாவில் அவள் கவலையை மறந்தேன்‍ - அன்றும் உணரவில்லை

திருமணத்திற்குப் பின்,தொலைவில் நின்று தொலைபேசியில் சுகம் விசாரித்தேன் - அன்றும்உணரவில்லை

உணர்ந்த தருணம், அருகில் நின்று அம்மா என்று அழ - அடுத்த விடுமுறையை எதிர்நோக்கினேன்!

உன்னிடம் கேட்கும் வரம் ஒன்றே -‍ மறுபிறவியிலும் உன் மகனாக பிறக்கின்ற வரம் கொடம்மா, என் கண்ணீரால் உன் பாதம் கழுவ !!!"

"என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் ......"
என்று கைபேசி கூப்பிட்டதும் ஜனனி உடனே கைபேசியை எடுத்து பார்த்தாள். அது வீட்டு நம்பர் என தெரிந்ததும் உடனே ஆன் செய்து " என்ன பரிமளம்? இப்போ போன் பண்ணிருக்க! என்ன விஷயம்? பாப்பாக்கு ஏதும் உடம்பு சரி இல்லையா?காலைல நல்லாதானே இருந்தா? பணம் ஏதும் வேணுமா? என்றாள் பதற்றமாக. "இல்லைங்கம்மா ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணினேன்மா." என்றாள் வேலைக்காரி பரிமளம்.

"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு எனக்கு லஞ்ச் டைம் முடிய போகுது" என்றாள் ஜனனி. "அது ஒன்னுமில்லைங்கம்மா நம்ம பாப்பா இன்னைக்கு அம்மான்னு கூப்பிடுச்சு மா " என்றாள் பரிமளம். "அப்படியா? எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா! பாப்பாகிட்ட உடனே போன் குடேன்." என்று அவசர படுத்தினாள். தன் குழந்தை அம்மா என்று கூப்பிட்டு கேட்க எந்த தாய்க்கு தான் ஆசை இருக்காது? ஜனனிக்கு கையும் ஓடலை காலும் ஓடலை உடனே வீட்டுக்கு போய் குழந்தயை தூக்கி கொஞ்சி அது அம்மா என்று கூப்பிடுவதை கண்ணார பாக்கவேண்டும் என ஆசையாக இருந்தது.

"என்ன பண்ற பரிமளம் சீக்கிரம் பாப்பா கிட்ட குடு " என்றாள். பரிமளமும் உடனே பாப்பாவை தூக்கி வைத்து அதன் காதோரம் போன் வைத்து "சொல்லு பாப்பா அம்மா சொல்லு" என்றாள். அது "பாப்ப போஒ " என மழலை மொழியில் ஏதேதோ கீச்சிட்டது. "பாப்பா அம்மா சொல்லு பாப்பா" என்றாள் பரிமளம் . ஜனனியும் "அம்மா சொல்லுமா குட்டிம்மா புஜ்ஜிமா " என்று கொஞ்சி கெஞ்சினாள்.

சிறிது நேர கெஞ்சலுக்கு பிறகு "ம்ம் மா மா அம்மா அம்மா " என தனது சிப்பி வாய் திறந்து முத்து சொற்களை உதிர்த்தது. ஜனனி அப்படியே சந்தோஷத்தில் உறைந்து போனாள்.

குழலினிது யாழினிது என்பர் தன்மக்கள்
மழலை சொல் கேளாதார்
என்ற வள்ளுவரின் வாக்கை முழுமையாக அனுபவித்தாள்.

"இன்னும் ஒரு தடவை கூப்பிடுடா செல்லம்" என்றாள்."அம்மா கேகுராங்கள கூப்பிடுமா" என்றாள் பரிமளம். அதுவும் அம்மா என்றது.
இப்படி பலமுறை கெஞ்சினாள் அதுவும் பலமுறை "அம்மா அம்மா" என்றது வேலைக்காரியின் முகத்தை பார்த்து ."

No comments:

Post a Comment