adsinr

Saturday 17 December 2011

என் நினைவுகள் என் காதலி!!



கொல்லைக் கிணற்றாழத்தில்
முழ்கிச் சலனமற்றுக் கிடக்கின்ற
கோலி குண்டாக
கன்றுக் காதலி நீ

குமுறல்
ஏமாற்றம்
தேம்பல்
ஏக்கம்
பிரிவு
அழுகை
என எதுவும் இல்லை

ஆனாலும்
அழுகிச் சிதையாமல்

நினைவுகளின் நீட்சியாய்
என்னைப் பற்றியபடியே
இருக்கிறாய் இன்னும்

No comments:

Post a Comment